Breaking News

உருவானது புரவி புயல் ...4 ஆம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்- வானிலை மையம்

அட்மின் மீடியா
0
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது டிசம்பர் 4-ஆம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
 

 
திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 400 கிலோமீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. 
 
நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும்.புயல் கரையை கடக்கும் போது 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும் இலங்கையின் திருகோணமலை அருகே கரையை கடக்கும் புயல் உடனடியாக மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. 
 
மேற்க்கு நோக்கி நகரும் புயல் மன்னார் வளைகுடாவுக்குள் நுழைந்து கன்னியாகுமரி பகுதிக்கு 3ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கபடுகின்றது
 
பின்னர் அந்த புயல்  மேற்கு - தென்மேற்கு அருகில் நகர்ந்து டிசம்பர் 3-ந்தேதி கன்னியாகுமரிக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் எனத் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback