Breaking News

ஆந்திராவில் திடீரென பரவும் மர்ம நோய்: 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அட்மின் மீடியா
0

ஆந்திரா மாநிலத்தில் எலுரு என்ற நகரின் பல இடங்களில் மர்ம நோய் காரணமாக 300க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 300க்கும் அதிகமானோர்  கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் அதிகமானோர் வீடு திரும்பிய நிலையில், எஞ்சியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து கண்காணிக்க மருத்து நிபுணர் குழுவினர் எலுருவில் முகாமிட்டுள்ளனர்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

அதில் எந்த பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.இதற்கிடையில், 

எலுரு பகுதியில் குடிநீரில் ரசாயன வேதிப்பொருள் நிறைந்த மாசுபட்ட நீர் கலந்திருக்கலாம் எனவும் அதனை குடித்ததால் தான் மக்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் ஏற்பாடிருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதனால், இந்த விவகாரம் குறித்து மருத்துவ குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback