2021 முதல் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது
அட்மின் மீடியா
0
குறிப்பிட்ட சில ஃபோன்களில், 2021 ஆம் ஆண்டிலிருந்து வாட்ஸ்அப் செயலி செயல்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு வெர்ஷன் 4.0.3 விற்கு முந்தைய வெர்ஷன்களை கொண்ட ஆண்ட்ராய்டு ஃபோன்களில், அடுத்த ஆண்டிலிருந்து வாட்ஸ்அப் செயலி செயல்படாது.
மேலும் ஐஃபோன்களில், ஐ.ஓ.எஸ் வெர்ஷன் 9 -ற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஐபோன் 4, 5, 5எஸ், 6, 6 எஸ் உள்ளிட்டவற்றை வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த, தங்களது ஐபோன் வெர்ஷனை அப்டேட் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
அதவாது, ஆபரேடிங் சிஸ்டம் 4 வரை கொண்ட அனைத்து செல்போன்களிலும் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது
உங்கள் செல்போன் எந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதை, செட்டிங் மெனுவில் சென்று பார்க்கலாம். அதற்கு செட்டிங் மெனுவில், ஜெனரல் மற்றும் இன்ஃபர்மேஷன் ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் சாஃப்ட்வேர் என்பதை கிளிக் செய்தால், அதில் ஆபரேடிங் சிஸ்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Tags: தொழில்நுட்பம்