BREAKING : குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய ஆதார் எண் தேவையில்லை; ஆதாரை இணைக்கக் காலக்கெடு நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய ஆதார் எண் தேவையில்லை என்றும், ஆதார் எண்ணை இணைக்கக் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஜனவரி 3-ம் தேதி குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தேர்வாணையம் அறிவித்ததால், தேர்வர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி குறிப்பை படிக்க:
https://www.tnpsc.gov.in/static_pdf/press/55_PRESS-RELEASE.pdf
Tags: தமிழக செய்திகள்