Breaking News

ஜனவரி 15 ஆம் தேதி முதல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. 




இதுவரை பள்ளிகள் திறப்பது குறித்த எந்த சூழலும் ஏற்பட்டதாக தெரியவில்லை. கடந்த நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்திருந்த நிலையில்  கைவிடப்பட்டது. 

இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஜனவரி 15-ல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். 

ஜனவரி 20க்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளர் உடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம் தொடங்கப்படும். நர்சரி ,பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும். ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு தமிழக பாட புத்தகம் சிறப்பாக உள்ளது ” என்றார்.


Tags: கல்வி செய்திகள்

Share this