Breaking News

புறநகர் மின்சார ரயில்களில் பயனம் செய்ய பெண் பயணிகளுக்கு டிச. 14 முதல் நேரக்கட்டுப்பாடு நீக்கம்: ரயில்வே

அட்மின் மீடியா
0

அனைத்து பெண்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் வரும் 14-ஆம் தேதி முதல் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 


 இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெண் பயணிகள் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் நேரக்கட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.பெண்களுடன் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்க ரயிலும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback