FACT CHECK:விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோசங்கள் எழுப்பினார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் போல் டர்பன் கட்டி வந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஜிந்தாபாத், காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோசங்களைஎழுப்பியதாக ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்திய விவசாயிகள் போரட்டத்தில் நடந்தது இல்லை. இங்கிலாந்தில் நடந்தது ஆகும்
பாகிஸ்தான் ஜிந்தாபாத், காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோசமிடும் சம்பவம் 06.06.2019 ம் ஆண்டு இங்கிலாந்தில் வசிக்கும் சீக்கியர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்
போது காலிஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களை
எழுப்பியனார்கள்
அந்த வீடியோவை தற்போது விவசாயிகள் போராட்டத்தோடு தொடர்பு படுத்தி பொய்யாக ஷேர் செய்கின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=sEQAej1HhFg&t=23s
Tags: FACT CHECK மறுப்பு செய்தி