FACT CHECK: பீகாரில் EVM மெஷினை ஹேக் செய்யும் போது பிடிபட்ட இளைஞர் என ஷேர் செய்யபடும் வீடியோவின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பீகார் தேர்தலில் EVM மெஷினை instant Hack செய்யும்போது பிடிபட்ட சங்கீ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ ஹேக் செய்யும் போது எடுக்கபட்டது இல்லை
மேலும் அந்த வீடியோ பீகாரில் நடந்ததும் இல்லை அந்த சம்பவம் ஹரியானாவில் நடந்தது ஆகும்
க்டந்த 3 ம் தேதி ஹரியானாவின் பரோடா சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் நடந்தது அப்போது ரூகி எனும் கிராமத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே வாக்காளர்களுக்கு வாக்குசீட்டுகளை கையடக்க பிரிண்டர் மூலம் பிரிண்ட் எடுத்து வழங்கி வந்த இளைஞர்களை வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வதாக நினைத்து மக்கள் தாக்கி ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
தன் பின்பு போலிஸார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வந்து அந்த பிறகு சோதனை செய்து அந்த பிரிண்டரில் இருந்து ஸ்லிப்பை எடுத்துக் காண்பித்த பிறகே அவரை வெளியே விட்டுள்ளனர்.
போல்சார் வரும் முன் அங்கு அவரை அடித்து விசாரிக்கும் போது எடுக்கபட்ட வீடியோவை எடுத்து ஹேக் செய்யும் போது பிடிபட்ட நபர் என ஷேர் செய்து வருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி