பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 8 மாதங்கள் கழித்து நவம்பர் 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 7 மாத காலமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்தனர். இந்த சூழலில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதனிடையே கடந்த 9ம் தேதி பெற்றோர்களிடம் தமிழக அரசின் சார்பில் கருத்து கேட்கப்பட்டது. பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளி திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில் 16ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் எப்போது பள்ளி திறக்கப்படும் என்று தேதி குறிப்பிடாமல் அறிவிப்பை ரத்து செய்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்