Breaking News

நவம்பர் இறுதி வரை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை' - தமிழக அரசு

அட்மின் மீடியா
0
மெரினா கடற்கரையில் நவம்பர் இறுதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கொரானா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அந்த தடை நீக்கப்படவில்லை.
 
 

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு தியேட்டர்கள், பூங்காக்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், கடற்கரைளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.மெரினா கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணையில், நவம்பர் இறுதிவரை மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
அப்போது திரையரங்குகளை திறக்கும்போது கடற்கரையில் மக்களை அனுமதிப்பதில் என்ன சிரமம் என தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுமக்களை மெரினாவில் அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback