அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு பார்வை: ஜோபிடன் வெற்றிமுகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரச்சு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சியின் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதி உள்ளது. அதன்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் பல மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்து விடுவது வழக்கம்.
இந்த முறை கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்றும் பொதுமக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த அளவிற்கு இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிலும் 70%க்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது
எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் ஒருவர் எத்தனை கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகளை ஒருவர் எந்த அளவுக்கு கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போது உள்ள நிலவரப்படி ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றார்
ஜோபிடன் 129 எலக்டோரல் வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார். டொனால்ட டிரம்ப் 91 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்