விமான நிலையம், எக்ஸ்பிரஸ் ரயில்களில் செல்லும் மக்கள் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
கொரானா காரணமாக கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் அரசு ஊழியர்கள் களுக்காக மின்சார ரயில் இயக்கபட்டது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் மற்றும் விமான நிலையம் செல்ல வேண்டிய பயணிகள் இந்த சிறப்பு ரயில்களில் பயனம் செய்ய அனுமதி வழங்கபட்டுள்ளது
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் ஆர்.தனஞ்செயலு வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் அரசு மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் நிறுவனத்திடன் இருந்து கடிதம் பெற்றுக் கொண்டு சிறப்பு ரயில்களில் பயணிக்கலாம்.
மேலும் விமானம் மூலம் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பொதுமக்கள், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் செல்லும் பயணிகள் பயண தேதியில் மின்சார ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகளின் எண்ணிக்கையை பொருத்து ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படலாம்." என்று அரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்