பீஹாரில் ஆட்சி அமைக்க போவது யார் ?முன்னனி நிலவரம் Update
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மூன்று கட்டங்களாக நடைப்பெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பிகாரில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி:
பாஜக கூட்டணி 130 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களில் முன்னிலை
Tags: இந்திய செய்திகள்