இஸ்லாமிய படிப்புக்கான நுழைவு தேர்வு: இந்து மாணவர் முதலிடம்
நாட்டில் இஸ்லாமிய படிப்புகளில் சேர்வதற்காக பொது நுழைவுத் தேர்வை மத்திய பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற பொது நுழைவுத் தேர்வில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியைச் சேர்ந்த ர் சுபம் யாதவ் (21) முதலிடம் பிடித்துள்ளார்.
இதுவரை இந்த நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் அல்லாத முதல் மாணவர் இவரேயாவார்.
இதுகுறித்து சுபம் யாதவ் கூறும்போது,
இஸ்லாமிய மதம் குறித்து நம் சமூகத்தில் பல்வேறு தவறான கருத்துகள் பரவி வருகின்றன.
ஆனால் நான் மிகவும் புரிந்துகொண்ட மதம் என்றால் அது இஸ்லாமிய மதம் தான்
மேலும் இஸ்லாமிய மதம் குறித்து அதிக அளவில் தெரிந்து கொள்ளவே இந்த நுழைவுத் தேர்வை எழுதினேன். இரண்டு மதங்களுக்கு இடையே பாலமாக இருக்கவே நான் இஸ்லாமிய படிப்பை படிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்
Source:
Tags: இந்திய செய்திகள்