பிஐஎஸ் தர சான்று இல்லாத தலை கவசங்களுக்கு தடை!
அட்மின் மீடியா
0
இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் ஓட்டுநர் ஹெல்மெட் மட்டுமே நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..
இதன் மூலம் இந்திய தர நிர்ணயச் சான்று (பிஐஎஸ்) பெற்ற ஹெல்மெட்களை மட்டுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். அவற்றை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் தரமற்ற விலை குறைந்த ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் உத்தரவை காண
Tags: தமிழக செய்திகள்