Breaking News

நாளை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள்(புதன்கிழமை) அரசு பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாபலிபுரம் -காரைக்கால் இடையே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 


இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாக நாளை புதன்கிழமை தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாகவும் நிலைமைக்கேற்ப விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வருவார்கள் என்றார்.மேலும், நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெறுவதால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே பொது விடுமுறை விடப்படுகிறது. என்று தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback