Breaking News

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள்

அட்மின் மீடியா
0

நிவார்" புயலுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாகியுள்ள "கடி" புயல், இன்று சோமாலியாவில் கரையை கடக்கவுள்ளது.


வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல், வரும் 25 ஆம் தேதி கரையை கடக்கும் எனவும், இந்த புதிய புயலுக்கு "நிவார்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் தற்பொழுது கரையை நோக்கி நகரத் தொடங்கியது. இந்த நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்களிலும் தேசிய மீட்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த புயலுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாகியுள்ள "கடி" புயல், இன்று சோமாலியாவில் கரையை கடக்கவுள்ளது. 

இதனைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback