Breaking News

ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி?தெரிந்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0

ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி?



குறிப்பு 1:

ஆதாரில் மொபைல் எண் மாற்ற கண்டிப்பாக பழைய மொபைல் எண் இருக்க வேண்டும், ஒருவேளை அந்த பழைய எண் தொலைந்து போனாலும் மிக எளிமையாக மாற்ற முடியும்,அதையும் தெரிந்து கொள்ளுங்கள்


முதலில் https://uidai.gov.in/ என்ற ஆதார் வலைதளத்திற்கு செல்ல வேண்டும், 


அடுத்து அதில் aadhar update என்பதை  கிளிக் செய்ய வேண்டும்.


அதில்  update aadhar details online என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.


அடுத்து அதில்  உங்கள் ஆதார் எண் கேட்டகப்படும், பின்பு உங்கள் பழைய மொபைல்நம்பருக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும்.


அடுத்து உங்கள் மொபைல் நம்பருக்கு வந்த ஒடிபி-எண்ணை அந்த பதிவு செய்து அதில் data update request என்ற பக்கத்தில் 'மொபைல் நம்பர்" என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்


அடுத்து அங்கு உங்களின் புதிய மொபைல் எண் அந்த data update request வலைப்பக்கத்தில் கேட்கப்படும்,அவற்றில் புதிய மொபைல் எண் கொடுத்து submit update request கிளிக் செய்ய வேண்டும். அவ்வள்வுதான்


குறிப்பு 2:

ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண் தொலைந்து போயிருந்தால் அல்லது வேறு எண்ணை இணைக்க விரும்பினால், நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று தான் புதிய எண் பதிவு செய்ய முடியும் வேறு வழியே இல்லை.

அதற்க்கு நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள ஆதார் செணடர் அல்லது உங்கள் பகுதியில் உள்ள தாலுக்கா அலுவலகம் சென்றுதான் மாற்றமுடியும்

அவழங்கபடும் அதில் உங்கள் சரியான தகவலுடன் அதை நிரப்பவும்.பூர்த்தி செய்து கொடுத்து உங்கள் மொபைல் எண்ணை மாற்றம் செய்து கொள்ளலாம்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback