Breaking News

நீங்கள் இந்த மாவட்டமா.? நிவர் புயல் காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பேருந்துகள் ஓடாது.!!

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிவர் புயல் காரணமாக  இன்று மதியம் 1 மணி  முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது


புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் உத்தரவு






Tags: தமிழக செய்திகள்

Share this