Breaking News

தமிழகத்தில் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் !!

அட்மின் மீடியா
0

 கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 



மேலும் பள்ளிகள்வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் , மற்றும் கல்லூரிகளும் 16 ம் தேதி முதல் தொடங்கும் என  தெரிவித்திருந்தார்.


இதுதொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நேற்று நடைபெற்ற திடீரென ஆலோசனையில், கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback