தமிழகத்தில் 16 ம் தேதி முதல் மதரஸாக்கள் திறக்கப்படும்
அட்மின் மீடியா
0
முக்கிய அறிவிப்பு
தமிழகத்தின் அனைத்து மதரஸாக்களின் முதல்வர், நிர்வாகிகள் உயர் சமுகம்....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்
இப்பவும் கடந்த 2020 மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் இன்று வரை கொரோனா காரணமாக தமிழக அரசின் உத்தரவின் படி தமிழகத்தின் அனைத்து மதரஸாக்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது தமிழக அரசு பள்ளி கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 15:112020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என அறிக்கை வெளியிட்டுள்ளதை முன்னிட்டு தமிழகத்தின் பெரிய சிறிய ஹிஃப்ளு மதரஸாக்கள் உட்பட அனைத்து மதரஸாக்களும் வரும் 16.11.2020 அன்று திறக்கப்பட்டு 17.11.2020 முதல் பாடங்கள் ஆரம்பித்துக் கொள்ளுமாறு மஜ்லிஸ் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
சுகாதராம், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சேனிடைஸர் பயன்படுத்துதல் போன்ற தமிழக அரசின் எல்லா விதமான வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்குமாறு மஜ்லிஸ் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது
நடப்பு கல்வியாண்டை எவ்வாறு நிறைவு செய்வது நிஸாப் - பாட அளவுகளை எப்படி பூர்த்தி செய்வது போன்ற வழிகாட்டுதல்களை ஆலோசித்து விரைவில் அடுத்த அறிக்கை வெளியிடப்படும்.