10லட்சம் ரூபாய் பத்திரப் பதிவு செய்தால் பான் எண் அவசியம்
10லட்சம் ரூபாய் பத்திரப் பதிவு செய்தால் பான் எண் அவசியம்
வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரிச் சட்டம் 1962-இன் படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும்போது பத்திரப்பதிவுடன் பான் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும்போது அந்த தகவல்கள் வருமானவரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பத்திரப்பதிவு படிவம் 60 மற்றும் 61-ஏ படிவங்கள் இருக்கின்றன அதில் குறிப்பிட்டுள்ளபடி முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு;
https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr041120_835.pdf
Tags: தமிழக செய்திகள்