Breaking News

FACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அமெரிக்க நாட்டின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் வெளியே எழுதப்பட்ட வாசகம் "நாய்கள், முஸ்லிம்கள், மற்றும் கருப்பினத்தவர்கள்,   உள்ளே வர அனுமதியில்லை" 

இதை கேள்விப்பட்ட அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தற்போதைய உலக குத்துச்சண்டை சாம்பியன் சுவிடிஷ் படு ஜேக் மற்றும் (இமாமாக தொழவைக்கும்) உலக கிக் பாக்ஸர் சாம்பியன் ஆமிர் அப்துல்லா  அந்த கடைக்கு சென்று ஒலுச்செய்து நடுக்கடையில் முசல்லாவிரித்து ஜமாஅத் ஆக தொழும் காட்சி இதை கண்டு கடை நிர்வாகிகள் ஒடுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். ..மாஷா அல்லாஹ்... என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது காபி ஷாப் கிடையாது, அந்த வீடியோவில் பின்புறம் உள்ள லோகோவில் TR என்று இருக்கும் அதன் அர்த்தன் Tyson Ranch என் பது ஆகும் அந்த இடம் அவரது பண்ணை வீடு ஆகும் ,அதாவது அவர் தன் குத்துசண்டை பயிற்சி எடுக்கும் இடம் ஆகும்

மேலும் கடந்த 22.08.2020 அன்று தன் சக நண்பரும் சாம்பியனுமான படவோவ் ஜாக் என்பவர் மைக் டைசனுடைய பண்னை வீட்டுக்கு வந்த போது அவருடன் தொழுகை நடத்திய வீடியோ அது

அந்த வீடியோவை  படவோவ் ஜாக் தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்
 
 
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும்  காபி ஷாப்பில் என்று கதையை அளந்துவிட்டு பொய்யாக  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

 
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அந்த வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள படவோவ் ஜாக்
 
 
அட்மின் மீடியாவின் ஆதாரம்

 அது காபி ஷாப் இல்லை மைக் டைசனுடைய பண்னை வீடு என்பதற்கான ஆதாரம்

https://www.youtube.com/watch?v=h2yLqX1fcgc

 

https://www.youtube.com/watch?v=C062MVTBXdw


அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback