FACT CHECK: அமைச்சர் வேலுமணி அவர்களின் 200 கோடியில் கட்டபட்ட பங்களா என பரப்பபடும் வதந்தி
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தமிழக அமைச்சர் வேலுமணி அவர்களின் 200 கோடி மதிப்பிலான வீடு என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த வீடு தமிழக அமைச்சர் வேலுமணி அவர்களுடைய பங்களா இல்லை
அந்த அந்த பிராமாண்ட பங்களா கேரளாவைச் சேர்ந்த கட்டுமான தொழில் செய்யும் தொழிலதிபர் ரெஜி
என்பவருடையது ஆகும்
அவர் தன் கனவு இல்லத்தை கேரள மாநிலம், குறுப்பம்பாடி என்ற ஊரில்
கட்டி உள்ளார்
மேலும் கடந்த மே மாதம் இந்த வீடு கேரளாவில் நடிகர் மம்முட்டி வீடு என வைரல் ஆனதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஆன் மனோரமா என்ற இனையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அதில் அந்த பங்களாவின் உண்மையான உரிமையாளர் பேட்டியும் அளித்திருந்தார்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி