நீட் இணையதளம் முடக்கம் : நீட் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் மாணவர்கள் அவதி!
அட்மின் மீடியா
0
இள நிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகளை www.ntaneet.ac.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நீட் தேர்வு முடிவுகளை பார்க்க ஒரே நேரத்தில் அதிகம் பேர் இணையத்தில் முயர்சி செய்ததால் இணையத்தில் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியுள்ளது.
இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
Tags: கல்வி செய்திகள்