Breaking News

மொபைல் மூலம் ஆதார் கார்டில் முகவரி மாற்றம்/ திருத்தம் செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0

ஆதாரில் முகவரி மாற்றுவது அல்லது திருத்தம் செய்வது எப்படி?



  • முதலில்  https://ssup.uidai.gov.in/ssup/login.html  இந்த லின்ங் சென்று உங்கள் ஆதார் எண் அடுத்து கேப்சா பதிவு செய்து செண்ட் ஓடிபி என்பதை கொடுங்கள்


  • அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் முகவரியை பதிவு செய்ய்யுங்கள் இந்த புதிய  முகவரிக்கு தான் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு உங்களுக்கு தபாலில் வரும்.


  • இவ்வாறு முகவரியை பூர்த்தி செய்த பிறகு, உங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 


  • எந்தெந்த ஆவணங்களை பதிவேற்றலாம் என்று அங்கேயே இருக்கும் அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்


  • அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு புதுப்பிப்பதற்கான கோரிக்கை எண் (Update Request Number URN) வழங்கப்படும். அதனை கொண்டு உங்கள் ஆதார் அப்டேட் நிலையை தெரிந்து கொள்ளலாம்


உங்கள் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள

https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus


குறிப்பு:

நீங்கள் உங்களுடைய மொபைல் எண்னை ஆதாரில் பதிவு செய்யவில்லை என்றால், ஆன்லைனில் ஆதாரை புதுப்பிக்க முடியாது. அரசு சேவை மையத்திற்குச் சென்று தான் ஆதாரை புதுப்பிக்க வேண்டும். மேலும் உங்கள் ஆதாரில் மொபைல் எண் சேர்க்கவும் இ சேவை மையத்தில் தான் சேர்க்கமுடியும்


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback