நாளை காந்தி ஜெயந்தி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
நாளை அக் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசு விதித்துள்ள தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது
கிராமசபையில் பின்பற்ற வேண்டிய வழிமுறை
- கிராம சபை கூட்டவுள்ள இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் இருப்பின் தொடர்புடைய ஊராட்சியின் கிராம சபையானது வேறொரு நாளில் மாவட்ட ஆட்சி தலைவரின் அனுமதியுடன் நடத்தலாம்.
- காய்ச்சல், சளி, இருமல் மற்றும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வயதானவர்கள், கைக்குழந்தைகள் கலந்துகொள்ளக் கூடாது.
- கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்