தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும் ஆன்லைன் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி முதல் பரிசு ரூ50,000/-
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.இதுகுறித்து சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
இந்த வினாடி வினா போட்டிகள் அனைத்து சுற்றுகளும் ‘கோல் குயிஸ் ஸ்போர்ட்ஸ்’ என்ற யூ டியூப் இணையதளத்திலேயே நடத்தப்படும்.
முதல் நிலைப்போட்டி 3 சுற்றுகளை கொண்டது.
முதல் சுற்று 25-ந்தேதி மாலை 4 மணிக்கும்,
2-ம் சுற்று 26-ந்தேதி காலை 11 மணிக்கும்,
3-ம் சுற்று 26-ந்தேதி மாலை 4 மணிக்கும் நடக்கும்.
யூடியூப் தளத்திலேயே கமெண்ட் செக்சன் பகுதியில் சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர்.ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பதிலை பதிவிட வேண்டும்.
மொத்தம் 36 குழுக் கள் அரை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அரை இறுதி மற்றும் இறுதி சுற்றுகள் குறித்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
தேர்தல் மற்றும் பொது அறிவு சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும்.
ஓர் அணி அதிகபட்சம் 2 நபர்களை கொண்டதாக இருக்க வேண்டும்.
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்,
2-ம் பரிசு ரூ.25 ஆயிரம்,
3-ம் பரிசு ரூ.15 ஆயிரமாகும்.
முதல் நிலை மற்றும் அரை இறுதி போட்டிகளில் சரியான பதில் அளிப்போருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள்