Breaking News

#BREAKING :நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு ; மத்திய அரசு அறிவிப்பு: முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் 30 வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் நவ.30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு


  • செப்.30ல் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை தொடரும்- மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு 

 

  • மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்து கட்டுப்பாடு கூடாது. அனுமதி, ஒப்புதல், இ பாஸ் தேவையில்லை.

 

  • பள்ளிகள், பயிற்சி நிறுவனங்களை மீண்டும் படிப்படியாக திறப்பது குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் முடிவு எடுக்கலாம். 

 

  • ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கலாம். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான சம்மதத்தின்பேரில், மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கலாம்.

 

  •  65 வயதுக்கு மேற்பட்டோர், நாள்பட்ட வியாதிகளை உடையவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அத்தியாவசியமான சூழலிலும், உடல்நல காரணங்களையும் தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம். வீடுகளில் இருக்க வேண்டும்.

 

  • வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய நீச்சல் குளங்கள் திறக்கலாம். 

 

  • சினிமா தியேட்டர்கள், பன்னடுக்கு திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

  

 



மேலும் விவரங்களுக்கு:-

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1667821#.X5fyH3lYxPk.twitter

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback