Breaking News

FACT CHECK: நீட் தேர்வை ஆதரித்து புத்தகம் வெளியிட்டாரா சூர்யா ? உண்மை என்ன?has suriya released book favouring neet

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சூர்யா சில வருடங்கள் முன்பு நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார் என்றும், ஆனால் தற்போது அதே நீட் தேர்விற்கு எதிராகப் பேசி வருவதாக ஒரு புத்தகவெளியீட்டு விழா புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது 

மேலும் இந்நிகழ்ச்சியில் வெளியிட்ட புத்தகமானது நீட் தேர்விற்கான கோச்சிங் புத்தகம் அல்ல. நீட்டைப் பற்றிய விவாதத்திற்கான புத்தகம் ஆகும்.

அகரம் அறக்கட்டளை சார்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பு  நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும்  என்பதாகும்.

அந்த அறக்கட்டளையில் மாணவர் தேர்வு குழுவை வழிநடத்தும் பேராசிரியர் கல்யாணி, நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் ஊடகங்களில் வெளியிட்டிருந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கியுள்ளார் என கூறியுள்ளார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this