Breaking News

அயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்

அட்மின் மீடியா
0

அயோத்தியில் பாபர் மசூதிக்கு பதிலாக கட்டப்படும் புதிய மசூதி, பாரம்பரிய முறைப்படி இல்லாமல் புதிய வடிவத்தில் கட்டப்படும்  என்று இந்தோ -இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை கூறியுள்ளாது. 


மசூதி கட்ட அளிக்கபட்ட  நிலத்தில், மசூதி மட்டுமின்றி, இஸ்லாமிய ஆய்வு மையம், நுாலகம், மருத்துவமனை, அருங்காட்சியகம் ஆகியவற்றை கட்டவும், அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. 

மேலும் அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதியின் வடிவமைப்பு பற்றிய புதிய தகவல்களை இந்த அறக்கட்டளையின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அதர் ஹூசைன் வெளியிட்டார். 

அயோத்தியில் பாபர் மசூதி 15 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருந்தது. அதே அளவிலேயே புதிய மசூதியும் கட்டப்பட உள்ளது. 

வழக்கமாகக் கட்டப்படும் மசூதிகளின் வடிவம் போல் இல்லாமல், புதிய மசூதியின் வடிவம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மெக்காவில் அமைந்துள்ள சதுர வடிவிலான காபா ஷரீப்பை போல், புதிய மசூதியை கட்டுவதற்கான திட்டம் உள்ளது. 

இந்த புதிய மசூதியில் பாரம்பரிய முறையிலான குவிமாடங்களும், உயரமான ஸ்தூபிகளும் இடம் பெறாது.

மேலும் இந்த மசூதிக்கு மசூதி அமைந்துள்ள இடமான தானிப்பூரின் பெயரிலேயே தானிப்பூர் மசூதி என்று அழைக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் மேலும் மசூதி கட்டுவதற்கு மக்கள் நிதியளிக்க வசதியாக, இணையதளம் துவக்கப்பட உள்ளது. இதில், முஸ்லிம் அறிஞர்களின் கட்டுரைகள் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்

Source:

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mosque-in-ayodhya-may-be-square-shaped-like-kaaba-trust-official/articleshow/78218748.cms?from=mdr

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback