Breaking News

நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி

அட்மின் மீடியா
0

முதலாமாண்டு மாணவர்களுக்கு, நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கல்லூரிகளை நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கும்படி பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பதிவில் 

திருத்தி அமைக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி தொடங்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக அக்டோபரில் மாணவர் சேர்க்கையை முடித்து விட வேண்டும் என்றும் 

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வை (2021 மார்ச் 8ம் தேதியில் தொடங்கி, 26ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 

இறுதி செமஸ்டர் தேர்வை 2021 ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி, 21ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்

மேலும் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அன்றைய தினம் கல்லூரியை திறப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், மறுநாளில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிகிறது.


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback