Breaking News

அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரும்: அமைச்சர் காமராஜ் தகவல்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்றால் என்ன

இப்போது ஒரு மாநிலத்தில் உள்ளவர் தனது ரேஷன் கார்டை வைத்து, அந்த ஒரு குறிப்பிட்ட ரேஷன் கடையில்தான் பொருட்களை வாங்க முடியும். ஆனால், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால், எந்த மாநிலத்தில் உள்ள பொது விநியோக கடையிலும், அந்தந்த மாதத்திற்கான தனது பங்கினை பெற முடியும்.


ஆனால் இந்த திட்டம் பெரும்பாலும் உதவக்கூடியது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குதான் மாநிலங்களில் இருந்து இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்  பல்வேறு தொழில்களுக்கு தொழிலாளர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் குடும்ப அட்டையை மாநிலத்துக்கு மாநிலம் மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே தங்களிடமுள்ள, ரேசன் கார்டுகளை வைத்து அவர்கள் இருக்கக்கூடிய மாநிலத்தில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

அதே போல் நாமும் பனி நிமித்தமாக வேறு ஊர்களுக்கு சென்றால் அந்த பகுதியில் உங்கள் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி கொள்ளலாம்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback