அக்டோபர் 15 முதல் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி..
அட்மின் மீடியா
0
5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு!
மத்திய அரசின் புதிய தளர்வுகள் என்ன என்ன :
நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக்டபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு அறிவித்து ள்ள மத்திய அரசு
அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது
மேலும் நீச்சல் குளங்கள் பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி
நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது
மேலும் பள்ளிகூடங்கள், பயிற்சி மையங்கள் திறப்பது குறித்து அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்