Breaking News

FACT CHECK: EIA குறித்து பேசிய பெண் மீது ஆசிட் வீச்சு என பரவும் வதந்தி? உண்மை என்ன ?

அட்மின் மீடியா
0


சமூக வலைதளங்களில் பலரும்  EIA குறித்து பேசிய பெண் மீது ஆசிட் வீச்சு என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


EIA குறித்து பேசிய பெண்ணின் பெயர் பத்மபிரியா ஆவார் மேலும் அவர்  சென்னை தமிழச்சி  எனும் பெயரில் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் ,டிவிட்டர், பேஸ்புக்  போன்றவை பயன்படுத்தி வருகிறார்.


அவர் மீது ஆசிட் அடித்ததாக பரவும் செய்தி கடந்த 2019 ம் ஆண்டு அவர் வெளியிட்ட ஒர் விழிப்புணர்வு வீடியோவாகும்

அந்த முழு வீடியோவில் பாதி கட் செய்து தற்போது நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

முழு வீடியோ பார்க்க

https://www.youtube.com/watch?v=K5Xe7T_Yr5o


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback