தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் மீதான வழக்கு ரத்து: மும்பை நீதிமன்றம்
அட்மின் மீடியா
0
கொரோனா பரவலுக்காக தப்லீக் வெளிநாட்டினர் பலிகடாக்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என மும்பை ஐகோர்ட் கூறி உள்ளது.
மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் பெஞ்ச் நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை தாங்கிய நீதிபதி நளவாடே எழுதிய தீர்ப்பில், "வெளிநாட்டவர்கள் பெற்று வந்த விசாவில், அவர்கள் மதம் சார்ந்த இடங்களுக்கோ அல்லது மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ எந்தத் தடையும் இல்லை," என்ற குறிப்பிட்டார்.
மேலும் தனது தீர்ப்பில் "அதிதி தேவோ பவா" அதாவது "நம் விருந்தினர்கள் கடவுள் போல" என்று இந்திய வழக்கம் குறித்தும் நீதிபதி நளவாடே குறிப்பிட்டுள்ளார்.
நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்" என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Source:
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி