உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை
அட்மின் மீடியா
0
சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டது. தற்போது அனைத்து வழக்குகளும் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியில் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளில் மட்டும் நேரடி விசாரணை செய்யப்படும் எனவும் அறிவிப்பு-
தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு
கொரானா ஊரடங்கால் மூடப்பட்ட நீதிமனறம் 5 மாதத்துக்கு பிறகு உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணையை துவக்க உள்ளது.
Tags: தமிழக செய்திகள்