Breaking News

நியூசிலாந்து மசூதியில் 51 பேரை சுட்டுக்கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!:

அட்மின் மீடியா
0


நியூசிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஆண்டு  மார்ச் மாதம் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று கூடியிருந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து வெலிங்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்த ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டிதனமான சரமாரியாக துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பிரென்ட்டன் டாரன்ட்(29) என்பவனை போலீசார் கைது செய்தனர்.பிரென்ட்டன் மீது 51 கொலை, 40 கொலை முயற்சி, பயங்கரவாத செயலுக்கான ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

இதுதொடர்பான விசாரணை நடத்தி வந்த வெலிங்டன் நீதிமன்றம் முக்கிய குற்றவாளியான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரண்டுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி தன் தீர்ப்பில்  டாரண்ட்டை போன்ற தீயசக்திகளை கடவுள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்று குறிப்பிட்டார்.

மேலும் ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமின்றி மக்களை டாரண்ட் கொன்றுவிட்டதாக நீதிபதி குற்றவாளி பிரென்ட்டன் குற்றங்கள் மிகவும் கொடூரமானது. ஆயுள் முழுவதும் சிறை என்பது கூட அந்த கொலை பாதகங்களுக்கு பிராயச்சித்தமாகாது என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback