Breaking News

கேரளா ஏர்இந்தியா விமான விபத்து: 2 விமானிகள் உள்பட பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

அட்மின் மீடியா
0
துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று கேரள மாநிலம், கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது


                                                      படம் உதவி DD News

இதில் 191 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. அதில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் அடங்குவர் .

இந்த விமானவிபத்தில் விமானத்தின் கேப்டன் தீபக் சாத், துணை விமானி அகிலேஷ் குமார் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு. 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback