Breaking News

FACT CHECK: சீனாவில் உள்ள மலையில் விசித்திரமான சத்தம் !! உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சீனாவில் உள்ள  மலையில் விசித்திரமான சத்தம் அது டிராகனின் சத்தம், இல்லை இது சாத்தானின் அலறல், இல்லை இது பூமியில் நிலநடுக்க சத்தம் இதனால்  ஆயிரக்கணக்கானோர் பெரும் பூகம்ப அச்சங்களால் கிராமத்தை விட்டு வெளியேற காரணமாகிறது என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி  பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவின் சியுஷியில் உள்ள மலையின் உச்சியில் எதிரொலிக்கும் ஒரு விசித்திரமான சத்தம் பலரை அச்சமும் குழப்பம் அடையசெய்தது  இதற்க்கு பல்வேறு கட்டுகதைகள் வேறு பரவுகின்றது

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிய பின்னர் அதிகாரிகள் நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை  அனுப்பினர்.

ஒரு வாரம் பரவிய கட்டுகதைகளுக்கு அந்த குழுவினர் விடை அளித்தனர் அவர்கள் அந்த சத்தம் ஒரு பறவை கத்தும் சத்தம் என்றும் மஞ்சள்  கால்கள் உடைய அந்த பறவை ஒரு காடை இனத்தை சார்ந்த  சிறிய வால் கொண்ட ஒரு பறவையாகும் மேலும் ஒரு சிறிய பறவையிலிருந்து வரும் ஒலி எப்படி இவ்வளவு தூரத்திற்க்கு என்றால் இனப்பெருக்க காலத்தில், பெண் மஞ்சள்-கால்  காடைகளின் உரத்த சத்தம் 100 மீட்டர் தூரத்தில் கேட்கலாம்.என்றார்கள்

மேலும் உள்ளூர் ஆரம்ப பள்ளி ஆசிரியர் லியு ஃபுகியோங் அந்த பறவை சத்தம்  பற்றி இது ஒவ்வொரு ஆறு அல்லது ஏழு நிமிடங்களுக்கும் இரண்டு அல்லது மூன்று முறை மீண்டும் மீண்டும் ஒலித்தது அந்த ஒலி மிகவும் ஆழமானது, இது மிகவும் விசித்திரமானது என்று நான் நினைக்கின்றேன் என கூறினார்

ஆகவே சமூக வலைதளத்தில்  டிராகனின் சத்தம், சாத்தானின் அலறல் என்பன எல்லாம் பரப்பும் செய்தி பொய்யானது  யாரும் நம்ப வேண்டாம்

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback