Breaking News

FACT CHECK: மும்பை போலிஸார் 140 என்ற எண்ணில் இருந்து கால் வந்தால் எடுக்காதீங்க என்று கூறினார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  140 என்ற எண்ணில் இருந்து கால் வந்தால் எடுக்காதிீங்க என்று மும்பை போலிஸார் எச்சரிக்கை விடுக்கும் ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்த சம்பவம் கடந்த 3 நாட்களாக வலம் வருகின்றது நாமும் மும்பையை சேர்ந்த ஊடகங்களை அலசி ஆராய்ந்ததில்  


பிரபலமான சோனி லைவ் சேனலில் புதியதாக வர உள்ள சீரியலின் விளம்பரத்திற்க்காக அவர்கள் , சோனி லைவ் ஆப்பில் சப்ஸ்கிரைப் செய்த நபர்களுக்கு திடீரென ஒர் கால் செய்து நான் ஓரு கொலையை நேரில் பார்த்துவிட்டேன் அந்த கொலைகாரன் என்னை பார்த்துவிட்டான் அவன் என்னையும் கொலை செய்ய போகின்றான் நான் ஆபத்தில் இருக்கின்றேன் என  சொல்லிவிட்டு போனை கட்செய்து விடுகின்றார்கள் , பலரும் பயந்து போலிஸீல் புகார் செய்து உள்ளார்கள்

கடந்த 3 நாட்களில் மும்பையில் பல  காவல்நிலையங்களில் அது போல் புகார்கள் பல வந்துள்ளன. மேலும் பலருக்கும் வந்த கால்கள் அனைத்தும் 140 என்ற எண்ணில் தான் வந்துள்ளது.

மேலும் சோனி டிவியும் நாங்கள் சீரியலின் விளம்பரத்திற்க்குதான் இது போல் செய்தோம் யார் மனதையும் புன்படுத்த அல்ல என்றும் நாங்கள் மன்னிப்பும் கேட்கின்றோம் என்றும் செய்தி வெளியிட்டார்கள்


இந்நிலையில் மஹாராஷ்ட்டிரா சைபர் கிரைம் போலிஸார் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் அது ஒரு டெலி மார்க்கெட்டிங் கால்தான் அதனால் யாரும் பயபடவேண்டாம் என்றும் உங்களுக்கு எப்போது யார் போன் செய்து ஓடிபி விவரங்களை கேட்டாலும் சொல்லாதீர்கள் என எச்சரிக்கை செய்தியும் வெளியிட்டுள்ளார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback