Breaking News

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ: கோபால் கைது

அட்மின் மீடியா
0
இந்து தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. 


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, இஸ்லாமிய இயக்கத்தினர் மத்தியகுற்றபிரிவு போலீஸ் மற்றும் காவல்நிலையங்களிலும் புகார் அளித்தனர். 

இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு போலீசார், கோபாலை கைது செய்தனர். 

அவர் மீது, அவதூறு கருத்துகளை பேசி மத உணர்வுகளை தூண்டுவது, மத மோதல் ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை வெளியிடுவது உள்ளிட்ட மூன்று பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback