Breaking News

பக்ரீத் பண்டிகைக்கு பொது இடங்களில் விலங்குகளை பலியிட கூடாது ;உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அட்மின் மீடியா
0
மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள பக்ரித் பண்டிகைக்கு பொதுவெளியில் மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிடுவதற்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி அவர்கள் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த ஜூன் 20ம் தேதி, பொது இடங்களில் விலங்குகள் பலியிடுவதற்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார். ஆனால் பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டதையும், தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.


source; 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback