தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தடை செய்யவும், ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் ஜூலை 15-க்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால், தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இந்த வழக்கை வருகின்ற 20 தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags: தமிழக செய்திகள்