Breaking News

சாத்தான்குளம் வழக்கு: மதுரை நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம். ஏன்? காரணம் என்ன?

அட்மின் மீடியா
0
சாத்தான்குளம் வழக்கு: மதுரை நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம். ஏன்? காரணம் என்ன?
  
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவலர்களால்  இறப்பு  விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  

இந்த விவகாரத்தில் நீதி கிடைக்குமா என்று இருந்த மக்களுக்கு, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்தது இந்த நடவடிக்கை. 

மேலும் அதன் பின் வழக்கு சிபிசிஐடி  மாற்றப்பட்டு  கொலை வழக்காக பதிவு செய்யபட்டு தற்போது 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. 

ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீர்த்துப்போக செய்யப்படும் என பரவலாக பேசப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டதால் கொலை வழக்கு பதிவு, கைது என மக்கள் நம்பிக்கை பெற்றுள்ள நடவடிக்கைகள் பலராலும் பாராட்ட படுகின்றது

இந்த விவகாரத்தில் நீதியை நோக்கிய பாதையில் இந்த வழக்கு பயணிக்கக் காரணம் என்றால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு நீதிபதிகள் புகழேந்தி, பிரகாஷ், நேரடி விசாரணை செய்து அழுத்தமான அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி பாரதிதாசன், அதில் சாட்சி சொன்ன பெண் தலைமைக் காவலர் ரேவதி ஆகியோரின் பெயர்களைச் சொல்லலாம். 

இந்நிலையில்  நீதிபதி மாண்புமிகு பிரகாஷ் அவர்கள்  மதுரைக் கிளை நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற பிரிவு என்ற அடிப்படையில் மதுரையில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளார்கள். 

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் உயர் நீதிமன்ற கிளையில் 3 மாதங்களுக்கு மேலாக நிர்வாக நீதிபதியாக பணிபுரிந்தவர் நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றப்பட்டுள்ளார். இவர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback