Breaking News

குர்பானி கொடுப்பது பற்றிய முக்கிய அறிவிப்பு: ஜமா அத்துல் உலமா சபை

அட்மின் மீடியா
0
                                                       குர்பானி 2020

இந்த குர்பானி என்பது என்ன என்று நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். இது உங்களது தந்தை இபுறாஹீம் அலை அவர்களின் நடைமுறை என முஹம்மது (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்



ஹஜ்ஜுப் பெருநாளன்று மனிதர்கள் செய்கிற வணக்கங்களில் குர்பானியை விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானது வேறெதுவும் இல்லை அப்பிராணிகள் தங்களது கொம்புகள் ரோமங்கள் கால் குளம்புகளுடன் கியாமத் நாளில் கொண்டு வரப்படும் குர்பானி பிராணியின் இரத்தம் தரையை தொடுவதற்குள் குர்பானி அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்று விடுகிறது. எனவே அதனை மனநிறைவுடன் நிறைவேற்றுங்கள் (திர்மிதி)

கண்ணியத்திற்குரிய ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புனித ஹஜ்ஜுப் பெருநாளுடைய மூன்று நாட்களில் வசதி படைத்தவர்கள் குர்பானி கொடுப்பது ஹனபி மத்ஹபின் படி வாஜிபாகும். ஷாபிஈ மத்ஹபின்படி சுன்னத் முஅக்கதாவாகும். குர்பானிக்கு மாற்று எதுவும் கிடையாது உங்கள் பகுதியில் குர்பானி கொடுக்க முடியாதவர்கள் குர்பானி கொடுப்பதற்கு வாய்ப்புள்ள பகுதிகளுக்கு பிராணியை அனுப்பி அல்லது அதற்குரிய பணத்தை அனுப்பி குர்பானி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குர்பானி கொடுப்பதற்கான சூழல் அறவே இல்லை என்றால் குர்பானி கொடுக்காமல் இருப்பது குற்றமாகாது

குர்பானி பிராணியை வாங்கி வைத்திருந்தவர்கள் குறிப்பிட்ட நாட்களில் குர்பானி கொடுக்காவிட்டால் அந்த நாட்களுக்குப் பிறகு அந்த பிராணிகளை விற்று பணத்தை தர்மம் செய்து விட வேண்டும் 


தற்போதைய நிலையில் கூட்டு குர்பானிக்கான சூழல் இருக்கிறதா என்பதை ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சூழல் அனுமதிக்கும் எனில் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கலாம், இல்லை எனில் கூட்டுக் குர்பானி திட்டத்தை தவிர்த்து விடுவதே நல்லது

அனைத்து அமல்களையும் நிறைவாகவும் முழுமையாகவும் நிறைவேற்றும் நஸீபை தருவானாக அல்லாஹ் தஆலா அதிவிரைவில் ஏற்படுத்தித்தருவானாக என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது






Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback