கொரானா சிகிச்சை அளிக்க யாரும் வரவில்லை என வைரல் வீடியோ ரஜினி பிரியா: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ
அட்மின் மீடியா
0
கொரானா உறுதி செய்யப்பட்ட நிலையில் தன்னை மாநகராட்சி நிர்வாகம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை எனபெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இந்நிலையில்
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியது
கொரானா பரிசோதனையின்போது அப்பெண் கொடுத்த முகவரியில் திருவள்ளூர் மாவட்டம் என குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாக சென்னை மாவட்ட கொரானா உறுதி செய்யப்பட்டோர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அவர் மாநகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதுவரை இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதில்லை. பரிசோதனையின்போது பொதுமக்கள் சரியான முகவரியை தெரிவித்தால் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம். என கூறியுள்ளார்கள்
மேலும் .மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினி பிரியா வெளியிட்டுள்ள வீடியோவில், தமக்கு சிறப்பான சிகிச்சை கிடைத்து வருகிறது என்றும் அதற்கு காரணமான முதல்வர் பழனிசாமி, மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags: மறுப்பு செய்தி