முழு ஊரடங்கு 5 மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து
அட்மின் மீடியா
0
சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வங்கிகள் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும் எனவும் பெட்ரோல் நிலையங்கள் காஸ் ஏஜென்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் டீலர்களிடம் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது. என தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்