ஜூலை 29 ஆம் தேதி ஹஜ் : குறைந்த அளவினருக்கு மட்டுமே அனுமதி;கடும் விதிமுறைகள்
அட்மின் மீடியா
0
இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு சவுதி அரேபியாவில் உள்ள 1,000 நபர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
மேலும் ஹஜ் மேற்கொள்ளும் சவுதியில் உள்ள உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அந்நாட்டு அரசு அதில்
ஹஜ் செய்ய 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.
ஹஜ் மேற்கொள்ள உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஹஜ் சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் யாத்ரிகள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மிக மிக அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்