Breaking News

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஈதுல் அழ்ஹா பெருநாள்: தலைமை காஜி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு



தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாஹீத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார். 

இன்று பிறை தென்பாடாத காரணத்தால் ஆகஸ்ட் 1-ல் பக்ரீத் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருமக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்று (21-07-2020) செவ்வாய்க்கிழமை அன்று தமிழகத்தில் எந்த இடத்திலும் துல்ஹஜ் மாத பிறை பார்க்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு தலைமைகாஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள்

ஆதலால் வரும் 01.08.2020 சனிக்கிழமை ஈதுல் அழ்ஹா பெருநாளாகும். மேலும் 31.07.2020 வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நாள் நோன்பு நோற்க வேண்டும் என்பதை இதன் மூலம் உங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்கிறோம்

.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback